From today April 1st
ஏப்ரல்-1. இந்த தேதியை கேட்டால் அனைவருக்கும் முட்டாள்கள் தினம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1, மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இன்று முதல் பல நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்
1. 2017-18-ம் ஆண்டுக்கான நிதி ஆண்டின் பல்வேறு கட்டண மாற்றங்கள், வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன
2. இன்று முதல் ஆதார் எண் இருந்தால்தான் புதிதாக வாகனத்தைப் பதிவு செய்ய முடியும்
3. இன்று முதல் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம் தொகை 41 சதவீதம் உயர்ந்துள்ளது.
4. நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச் சாவடிகளில் நுழைவுக்கட்டணம் இன்று முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. இவற்றில் 20 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5. இன்று முதல் எஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மாநகரப் பகுதிகளில் 5,000 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 3,000 ரூபாயும், சிறு நகரப் பகுதிகளில் 2,000 ஆயிரம் ரூபாயும், கிராமப் பகுதிகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்சத் தொகை வைத்திருக்க வேண்டும்
6. இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
7. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கை உறுதியாகவில்லை என்றால் அவர்களுடைய முன்பதிவு ரத்து செய்யப்பட்டு பணம் திரும்ப அளிக்கும் வழக்கம் அமலில் இருந்தது. ஆனால் இன்று முதல் ரயில் புறப்படும் வரை இருக்கை உறுதியாகாத பட்சத்தில் அவர்கள் அடுத்த ரயிலில் பயணிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
8. இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ இலவச சலுகை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சலுகை இன்னும் 15 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
9. இன்று முதல் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
10. இன்று முதல் தமிழகத்தில் முதல்முறையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. சென்னையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும்
Comments